• 1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

நீங்கள் தமிழ நூல் மன்றத்தில் மின் நூல்கள் வெளியிடக்கூடாத என்று பல நண்பர்கள் கேட்டார்கள்.

பல மின் நூல்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கும் போது நாமும் அதை நம் வலைதளத்தில் கொடுப்பதில் என்ன புதுமை வந்துவிடப் போகிறது, முடிந்தால் அரிதான நூல்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்தால் அதனை தமிழ் நூல் மன்றத்தில் பகிர்கிறோம் என்று அவர்களுக்கு கூறியிருந்தேன் 

அப்படி ஒரு அரிதான ஆவணம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் கிடைத்தது. அது தான்....     

1918-ஆம் ஆண்டின் தேசத்துரோக குற்றங்களின் அறிக்கை

இந்த பெயரில் 1918ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம், ஒரு சுமார் 240 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆய்வு குழுவின் தலைவர் அன்றைய தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.டி ரவ்லட், இந்த குழுவின் மற்ற உறுப்பினர்கள் பேசில் ஸ்காட், சி.வி.குமாரசாமி சாஸ்திரி (பார்ப்பனன் எதுவரை ஊடுருவி இருக்கிறான்), வெர்னே லோவேட், மற்றும் பி.சி.மிட்டர், இந்த குழுவின் செயலாளர் ஜே.டி.வி.ஹாட்ஜ்

இந்த குழுவின் அறிக்கை, அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது, என்னவென்றால், நாம் இந்திய சுதந்திர போராட்டம் என்று இன்றைக்கு படிக்கும் எல்லா நூல்களுக்கும் இதுவே மூல நூல்.    

பகுதி – 1 வரலாற்று பூர்வ செய்திகள்

 1. 1.       பம்பாய் புரட்சி சதிகள்
 2. 2.       வங்காளத்தின் புரட்சிகளின் தொடக்கம்
 3. 3.       வங்காளத்தின் புரட்சி குற்றங்கள் ஆதாரங்களின் தன்மைகள்
 4. 4.       வங்காளத்தின் புரட்சி குற்றங்கள்
 5. 5.       வங்காளத்தின் புரட்சி இயக்கங்களும் அவற்றின் இடையே உள்ள தொடர்புகளும்
 6. 6.       வங்காளத்தின் புரட்சி இயக்கங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சேர்க்கும் முறைகள்
 7. 7.       ஜெர்மனியின் ரகசிய திட்டங்கள்
 8. 8.       பிஹார் மற்றும் ஒரிசாவில் புரட்சி குற்றங்கள்
 9. 9.       ஒருங்கிணைந்த மாநிலங்களில் புரட்சி இயக்கங்கள்
 10. 10.   மத்திய மாநிலங்கள் மற்றும் புரட்சி இயக்கங்களுக்குமிடையான தொடர்புகள்
 11. 11.   பஞ்சாபில்  புரட்சி இயக்கங்கள்
 12. 12.   மதராஸ் மாநிலத்தில் புரட்சி குற்றங்கள்
 13. 13.   பர்மாவில் புரட்சி சதித்திட்டங்கள்
 14. 14.   முகமதிய நீரோட்டம்

பகுதி – 2 சிரமங்களும் ஆலோசனைகளும்

 1. சதித்திட்டங்களை கையாள்வதில் உள்ள சிரமங்கள்
 2. சட்டங்களில் தேவையான மாற்றங்கள்

பின்னிணைப்பு – 1

வங்காள நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் சாராம்சம்

பின்னிணைப்பு – 2

1907 – 1917 வரை வங்காளத்தில் நடந்த குற்றங்கள் அதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் இறந்தவர்கள் பற்றிய வயது, பாலினம், சாதி, மதம் தொழில் குறித்த புள்ளிவிவரங்கள்  

இந்த அறிக்கையின் சிறப்பு என்னவென்றால் புரட்சியை, சதி திட்டங்கள்,   குற்றங்கள், இயக்கங்கள் என்று  தரம் பிரித்துள்ளது தான், இயக்கங்கள் என்பதை நல்லமுறை என்றும் மற்ற இரண்டும் மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைப்பது என்றும் தெளிவாக பிரித்துள்ளனர்.    

இதில் குறிப்பாக வாஞ்சி நாதன் உட்பட இந்த புரட்சி குற்றங்களில் ஈடுபட்ட எல்லா பார்பனரும் சனாதன தர்மத்தை காப்பாற்றவே போராடியதாக ஆவணங்கள் சொல்கிறது.

மேலும் அறிய இந்த நூலின் மின்பிரதியை ரூ.1 மட்டும் செலுத்தி தரவிறக்கம் செய்துகொள்ளும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அது என்ன ஒரு ரூபாய், என்று கேட்கிறீர்களா, இதை தேடி இவ்வளவு விபரம் தட்டச்சு செய்த கூலி என்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தமிழ் நூல் மன்றத்துக்கு உங்கள் அன்பளிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். 

உண்மை இரண்டும் அல்ல சில தொழில்நுட்ப சிரமத்தால் பணம் செலுத்தினால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடிகிறது, அதனால் தான் இந்த ஒரு ரூபாய் செலுத்தும் படி கேட்கிறேன்.   


ஒரு ரூபாய் செலுத்தி உங்கள் ஆர்டரை பதிவு செய்த பிறகு, வரும் பக்கத்தில் “Download” என்று குறிப்பிட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் நூலை தரவிறக்கம் செய்யலாம்

 

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

1918 - தேசதுரோக குற்றங்களின் அறிக்கை - (ஆங்கிலம்)

 • Rs.1.00


தொடர்புடைய நூல்கள்

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

ஒன்றே சொல்! நன்றே சொல்!

ஒன்றே சொல்! நன்றே சொல்!

ஐயா சு.ப.வீ பல நூல்கள் எழுதியுள்ளார், ஆனால் அவரின் எழுத்துகளுக்கு முதல் அறிமுகமாக படித்து அவரது..

Rs.630.00

பகுத்தறிவு நூல் தொகுப்பு - 1

பகுத்தறிவு நூல் தொகுப்பு - 1

தமிழ் நூல் மன்றம் மூலம் நாம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் அடுத்த தொகுப்பு கீழே உள்ள 5 நூல..

Rs.193.00

பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

1.       இந்தியர் இல்லாத இந்தியா  - நிக்கோலஸ் தீர்ப்பு ..

Rs.375.00

Tags: Sedition Report - 1918