• விரல்மொழியர்

விரல்மொழியர்


பார்வையற்றோர் என்று நாம் பொதுவாக சொல்லும் மாற்றுதிறனாளிகள் எழுத படிக்க கற்றுக்கொள்ள Louis Braille என்பவர் ஒரு எழுத்து முறையை கொண்டுவந்தார்


அந்த முறையானது காகிதத்தில் எழுத்துக்களாக அச்சடிக்காமல் மேடு பள்ளமாக அச்சடிக்கும் ஒரு முறை அது


அந்த காகிதத்தை தடவிப் பார்த்தால் எங்கு மேடுகள் இருக்கும், பள்ளங்கள் இருக்கும், இடைவெளிகள் இருக்கும் என்பதை வைத்து பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ச்சியாக வாக்கியமாகும் புத்தகமாகவும் படிக்க உதவும் முறை அது


நம்மில் கவனித்திருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்


தொலைபேசிகளில் அதாவது அழுத்தக் கூடிய பொத்தான்கள் கொண்ட பழைய தொலைபேசிகளில்


ஐந்து என்ற எண் கொண்ட பொத்தானில் மட்டும் ஒரு சிறு மேடான புள்ளி இருக்கும் அந்த புள்ளியை அடையாளமாகக் கொண்டு ஐந்துக்கு மேலே இருக்கும் என் 2 ஐந்துக்கு கீழே இருக்கும் எண் 8 இப்படியாக எல்லா எண்களையும் பார்வை இல்லாதவர்கள் அறிந்துகொள்வார்கள்


அதேபோல ஆங்கில தட்டச்சு பலகையில் F மற்றும் J ஆகிய இரண்டு எழுத்துக்களில் தடவிப்பார்த்தால் ஒரு சிறு புள்ளி போல ஒரு மேடு இருக்கும்


இதை வைத்து அவர்கள் மற்ற எழுத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பதை அறிந்து பார்வை இல்லை என்றாலும் அவர்களால் தட்டச்சு செய்ய முடியும்


சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவர்கள் நம்மைவிட மிகவும் வேகமாக தட்டச்சு செய்வார்கள்


சரி இதையெல்லாம் இப்போது திடீரென்று நான் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்


இன்று நாளை டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுதிறனாளிகள் தினம்


இந்த நாளில் ஒரு சில முக்கியமான செய்திகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பது என் ஆசை


2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் நமது அய்யா சுபவீ அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பேசும்போது


பார்வையில்லாத நமது சகோதரர்களை இனி ஊனமுற்றவர்கள் என்று அழைப்பதை தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் என்று நாம் அழைக்க பழகுவோம் என்று கூறினார்


அதாவது அவர்களுக்கு ஒரு குறை இருக்கிறது என்று சொல்வதை விடுத்து நமக்கு இல்லாத வேறு ஒரு திறன் அதாவது மாற்றுத்திறன் இருக்கிறது அதனால் அவர்களை நாம் மாற்றுதிறனாளிகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று பேசினார் (உதாரணமாக நம்மை விட வேகமாக தட்டச்சு செய்யும் திறன், நுட்பமான செவிப்புலன்)


அந்த தொலைக்காட்சி பேச்சினை கேட்ட தலைவர் கலைஞர் உடனடியாக அதற்கு ஒரு அரசாணை பிறப்பித்து இனி அரசாங்கத்தின் எல்லா இடங்களிலும் ஆவணங்களிலும் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உறுதி செய்தார்நமது முகநூல் நண்பர் saravanan மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விரல்மொழியர் என்ற பெயரில் ஒரு தமிழில் பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் ஒன்றை கடந்த ஒரு வருடமாக நடத்திவருகிறார்கள்


இந்த மின்னிதழ், எந்த நிறுவனமும் சாராமல் ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல், ஜோ. யோகேஷ், ரா. சரவணன் ஆகிய 6 பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சி இது.


Louis Braille உருவாக்கிய Braille Method என்ற ஆங்கில பெயருக்கு “விரல்மொழியர்” என்ற பொருத்தமான தமிழ் பெயரும் தங்கள் மின்னிதழுக்கு வைத்திருக்கிறார்கள்


இவர்கள் கலைஞர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவருக்கு தங்கள் அன்பை காட்டும் விதமாக அச்சில் “முக-வரி ” என்ற பெயரில் ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்துள்ளார்கள்


இந்த நூல் வெளியீடு, இன்று மாலை அதாவது,   டிசம்பர் 3 ஆம் தேதி பெரியார் திடலில், திராவிடம் 2.0 நிகழ்வில் கனிமொழி அவர்கள் வெளியிட, அய்யா சுபவீ அவர்கள் நூலை பெற்றுக்கொள்ளுகிறார்       


விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

விரல்மொழியர்

  • Rs.100.00


தொடர்புடைய நூல்கள்

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.பெரிய கோயில், அதை தொடர..

Rs.60.00

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன..

Rs.40.00

4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

சமூகநீதி மற்றும் அது சார்ந்த அரசியலையும் தாண்டி சில வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர் அ..

Rs.440.00

Tags: விரல்மொழியர்