• 2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்


நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் இன்றும் சிலர் திமுக வழக்கம் போல விஞ்ஞான முறையில் ஊழல் செய்து தப்பித்து விட்டார்கள் என்று உளறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.   

விஞ்ஞான முறையில் இருப்பதை இருக்கிறது இல்லாதததை இல்லை என்று தான் நிருப்பிக்கமுடியும், அது எப்படி நடந்த குற்றத்தை நடக்கவில்லை என்று நிருபிக்க முடியும் என்று, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கை எதோ அவரது குடும்பத்தில் சொத்து தகராறு என்பது போல அந்த வழக்கை ஜெயலலிதா சொத்து வழக்கு என்று கடைசிவரை சொல்லிவந்த திருட்டு ஊடகங்கள் தான் விளக்க வேண்டும் 

2ஜி ஸ்பெக்ட்ரம் என்னதான் நடந்தது

ராசாவின் காலத்துக்கு முன் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய தொழில் நுட்பத்துக்கு லைசன்ஸ் வழங்குவது எப்படி என்றால், முதலில் முன் அனுபவம் உள்ள நிறுவனங்களை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க சொல்வார்கள், உடனே டாட்டா அம்பானி போன்ற பழம் பெருச்சாளிகள் விண்ணபிப்பார்கள், அவர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படும், அந்த உத்தரவை காட்டி அவர்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களோடு கூட்டு வைப்பார்கள், அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு பணத்தை அந்த புதிய கூட்டு நிறுவனத்துக்கு தந்த பிறகு டாட்டா அம்பானி போன்றவர்கள் அதன் பிறகு தான் லைசன்ஸ் பணத்தையே கட்டுவார்கள்


ராசா செய்தது ஒரு சிறிய மாற்றம் மட்டுமே, லைசன்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்யுங்கள் ஆனால் உங்கள் விண்ணப்பத்தோடு லைசன்ஸ் பணமும் சேர்த்து கட்ட வேண்டும், முழு லைசன்ஸ் தொகையோடு யார் யாரெல்லாம் விண்ணப்பித்தார்களோ அவர்களில் முதலில் வந்தவருக்கு முதலில் என்ற முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் என்று விதியை மாற்றினார்.


நிறைய புதிய நிறுவனங்கள் வந்தார்கள் விண்ணப்பித்தார்கள் லைசன்ஸ் பெற்றார்கள், பழம் பெருச்சாளிகள் இத்தனை காலம் எக்கு கோட்டை போல நாங்கள் வைத்திருந்த கார்பொரேட் உலகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட நபர் அதிலும் தென்னாட்டை சேர்ந்த ஒருத்தன் (வடநாட்டில் மதராசி என்றால் சற்று ஏளன பார்வை இன்றும் உண்டு) வந்து உலுக்கி பார்ப்பதா உயர்சாதி பனியாவும் பார்ப்பனரும் சேர்ந்து கட்டிய மாயக்கோட்டை தான் 2ஜி ஊழல் குற்றச்சாட்டும் வழக்கும்.


இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த தெளிவான விளக்கமும் அதன் பின் புலம் குறித்த ஆசிரியர் வீரமணி அவர்களின் “2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்” என்ற இந்த நூலை இந்த சுட்டியில் வாங்கிப் படியுங்கள் விலை ரூ.40 மட்டுமே/-

 

                           

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்

  • Rs.40.00


தொடர்புடைய நூல்கள்

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?

ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.பெரிய கோயில், அதை தொடர..

Rs.60.00

4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

4 நூல்கள் வெளியீடு மற்றும் பதிப்பக தொடக்க விழா

சமூகநீதி மற்றும் அது சார்ந்த அரசியலையும் தாண்டி சில வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர் அ..

Rs.440.00

விரல்மொழியர்

விரல்மொழியர்

விரல்மொழியர்பார்வையற்றோர் என்று நாம் பொதுவாக சொல்லும் மாற்றுதிறனாளிகள் எழுத படிக்க கற்றுக்கொள்ள Loui..

Rs.100.00

Tags: 2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்