பல நேரங்களில் நண்பர்கள், என்னிடம் பேசும் போது, சார், எனக்கு பெரியாரை பிடிக்கும், அண்ணாவை பிடிக்கும், கலைஞரையும் பிடிக்கும், ஆனால் இந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை எளிமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நூலை படிக்கலாம் என்று கேட்பார்கள்.
70 வருட திராவிட இயக்க வரலாறை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் ஓரிரு நூல்களை படித்தால் எப்படி போதுமானதாக இருக்கும், நிறைய படிக்கவேண்டும் என்று நான் கூறுவேன், இன்றைய படிக்க ஆசைதான் சார் ஆனால் நேரம் இல்லையே என்ன செய்வது, முதலில் எந்த எந்த நூல்களில் இருந்து தொடங்குவது என்று பதில் கேள்வி வரும்.
நண்பர்களுக்காகவே, எளிதில் படிக்கும் வகையில், அதாவது சராசரியாக 20 முதல் 40 பக்கங்கள் கொண்ட சிறு சிறு நூல்களாக தெரிவு செய்து 50 நூல்களை கீழே பட்டியல் இடுகிறேன், இவைகளை படித்தால் ஓரளவு திராவிட இயக்க வரலாறை நீதிக் கட்சி காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை புரிந்து கொள்ள முடியும்.
இந்த நூல்களின் தொகுப்பை நான் திராவிடம் 50 என்று அழைக்க விரும்புகிறேன்.
1. 21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!
· கழக பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி 25.10.1997அன்று பழனியில் நடைபெற்ற, மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
2. அபத்தமான இந்துமதம்
· குஷ்வந்த் சிங் அவர்களின் கருத்துகள் மற்றும் இந்துமதம் தன்னிடத்தில் கொண்டுள்ள அபத்தங்களை தோலுரிக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களின் கையடக்க நூல்
3. பிள்ளை-யார்? –
· பெரியாரின் ஆராய்ச்சி நூல் நான்கு வகை பிள்ளையார் பற்றி பெரியார் கூறுகிறார்
· முதல் கதை பிள்ளையார் நமக்கு எனலாம் தெரிந்த அழுக்கு உருண்டை பிள்ளையார் கதை
· இரண்டாம் கதை காட்டில் இரண்டு யானைகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சிவனும் பார்வதியும் அவற்றுள் புகுந்து அதனால் யானை தலையுடன் பிறந்த கதை
· மூன்றாம் கதை பார்வதி கருவுற்றிருந்த போது ஒரு அரசன் அவள் வயிற்ருக்குள் புகுந்து கருவின் தலையை வெட்டிவிட, தலையில்லாமல் பிறந்த குழந்தையின் கதை
· நான்காம் கதை, தக்ஷனின் யாகத்தை அழிக்க சிவன் தன பூதகணங்களின் தலைவனான கணபதியை அனுப்ப தக்ஷன் கணபதியின் தலையை வெட்டிவிட, இரண்டாம் மகன் சுப்பிரமணியன் சென்று அண்ணனை மீட்ட கதை
4. கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
· 19960-l வெளிவந்த இந்த நூல், அன்னை மணியம்மையார் எழுதியது, இந்த நூல் கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்று நிறுவுவதோடு நில்லாமல், ராமாயணமும் பாரதமும் காலத்தால் கந்தபுராணத்தை விட மிகவும் பின்தங்கியவை என்பதையும் தெளிவாக விளக்குகிறார்
5. கழகமும் பிரச்சாரமும்
· திராவிட கழத்தின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியதன் வழிமுறைகளை விளக்கும் இந்நூல் ஆசிரியர் வீரமணி அவர்களால் எழுதப்பட்டது
6. பகுத்தறிவு முழக்கம்
· “அறிவுடையார் அமெரிக்காவில்
அய்யாயிரம் ரூபாய் உடையார்
அறிவிலார் இங்கே அய்யங்கார் பழைய
இரும்புக் கடையிலே ரூ.3 ½ பழம்
இரும்பு பேரிச்சம் பழத்துக்கு உடையார்” என்று பகுத்தறிவு இல்லாமல் மக்கள் படும் அவதிகளை வேடிக்கையான கவிதை மூலம் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய நூல்
7. பெரியாரும் இராமலிங்கரும்
· பெரியார் மக்களிடையே கூறி வந்த புராணம், வேதம் மற்றும் மதம் பற்றிய கருத்துகளுக்கு ஒத்த சிந்தனை கொண்ட இராமலிங்க அடிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு
8. பேய்,பில்லி, சூனியம் ஆவி மொசடிகள்
· பேய்,பில்லி, சூனியம் ஆவி போன்ற கருத்துக்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை அறிவியல் பார்வையில் பல கட்டுரைகள் மூலம் விளக்கம்
9. 13 மாத பி.ஜே.பி ஆட்சி
· வாஜ்பேயி தலைமையில் நடந்த 13 மாத பி.ஜே.பி ஆட்சி, மொத்தத்தில் என்ன செய்து கிழித்தது என்பதை பற்றிய ஆசிரியரின் உரை நூல் வடிவில்
10. அம்மா பேசுகிறார்
· இந்தியாவில் முதல் முதலாக ராவண லீலா என்ற விழாவை நடத்திக் காட்டி பெரியாரின் மறைவுக்கு பிறகும் நாத்தீகம் மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்ட போராடிய வீராங்கனை, அம்மாவின் மனந்திறந்த கொள்கை முழக்கம் இந்த நூல்.
11. இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
· இந்துகள் என்ற பெயரில் மக்கள் எந்த காலத்திலும் ஒன்று சேர்ந்து ஏன் வாழவே முடியாது என்பதை பற்றிய அலசல்
12. இரண்டு வழிகள்
· உலகில் நல்வழி என்பதற்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று இயற்கையான வழி மற்றொன்று இயற்க்கைக்கு மாறான வழி, இவை குறித்து மேற்கு நாட்டு சிந்தனையாளர் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய நூல் தமிழில்
13. இராவணன் வித்தியாதரனா?
· 1947ல் வெளிவந்த இந்த நூல் பேராசிரியர் அ.சக்ரவர்த்தி அவர்களால் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூல், இந்திய விடுதலைக்கு முன்னரே பார்ப்பனிய எதிர்ப்பு தமிழ் நாட்டில் எப்படி இருந்த்தது என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
14. நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?
· இந்த நுழைவுத் தேர்வை பலர் பலவிதமாக பாராட்டிபெசினாலும் அடிப்படையில் இந்த தேர்வு என் கூடாது அதனால் என்ன என்ன கேடுகள் என்று விளக்கும் நூல்
15. நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
· நவோதயா பள்ளிகள், எப்படி பணம் படைத்த பெற்றோருக்கும், ஏழை பெற்றோருக்கும் இடையே ஒரு பெரும் சுவடை எழுப்பி சமத்துவத்தை குலைத்து, இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் முடியும் என்று கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் விளக்கமான நூல்
16. நரகம் எங்கே இருக்கிறது?
· “Where is the Hell?” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மார்ஷல் ஜெ காவின் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, பண்டிதர் எஸ்.முத்துசுவாமிபிள்ளை அவர்களால் 1932-ல் வெளிவந்த ஒரு அறிய நூல்
17. தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்
· இவ்விரு பெருந்தலைவர்கள் சந்தித்து கொண்ட தருணங்கள் அப்போது நடந்த சுவையான விஷயங்கள் குறித்த நூல்
18. பொசுங்கட்டும் மனுதர்மம்!
திராவிடம் 50
-
பதிப்பகம்:திராவிட கழகம்
- எழுத்தாளர்கள் நூல் திரட்டு
- வடிவமைப்பு: 0010
- வெகுமதி புள்ளிகள்: 70
- கையிருப்பு: 20
-
Rs.700.00
தொடர்புடைய நூல்கள்
ராஜராஜ சோழன் பார்ப்பன அடிமையா?
ராஜராஜ சோழன் என்றவுடன், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோயில்.பெரிய கோயில், அதை தொடர..
Rs.60.00
Tags: திராவிடம் 50