• தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 1

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இது ஒரு வரலாற்று ஆய்வு நூலா, அல்லது, பொழுது போகாமல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பா என்று நீங்கள் யோசிக்கலாம்.
இரண்டும் இல்லை, இந்திய வரலாற்றில் திட்டமிட்டே ஒரு சிலரால் மறைக்கப்பட்ட பகுதிகள் பல உண்டு, ஆனால் அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகம் எனக்கு ஏற்பட்டது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சிதான்.
பொது மக்கள் விவாதம் செய்யும் மேடையாக இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கடந்த ஜூன் 2017-ல், விவாதப்பொருள் நாம் நமது பெயருக்கு பின் சாதி பெயரை சேர்த்து கொள்ளலாமா? கூடாதா? என்பதுதான்.  அப்படி ஒரு தலைப்பை வைத்ததில் அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் அருவருக்கதக்க சாதிவெறி தான் முதலில் என் கண்களில் பட்டது.
தந்தை பெரியார், மிகவும் பாடுபட்டு இந்தியாவில் குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் மட்டும் தான் பெயருக்கு பின் சாதி பெயரை சேர்த்துகொள்வது அவமானமாக கருதப்படுகிறது, அந்த தொலைகாட்சி நிறுவனம் அப்படி ஒரு தலைப்பில் தமிழ் நாட்டில் ஒரு விவாதம் நடத்தியதே சாதி விஷத்தை தமிழ்நாட்டில் மீண்டும் பரவசெய்யும் அயோக்கியதனமே.
அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, அந்த விவாதத்தில் கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த ஒரு நபர், தன் பெயருக்கு பின் எதோ ஒரு “பறம்பில்” என முடியும் அடைமொழி சாதி பெயராக இருந்ததாகவும் அது தன் பூர்விக வீட்டின் பெயர் என்று தெரிந்து கொண்டதாகவும், நாட்டில் பல மக்கள் தங்களுக்கு, குடியிருக்க ஒரு குடிசை கூட இல்லாமல் அவதிப்படும் போது, தனக்கு பல தலைமுறைகளாக ஒரு பூர்விக வீடு உண்டு, அதன் பெருமையாக அதற்கு ஒரு பெயர் என்ற பெருமை எதற்கு என்று எண்ணி அந்த அடையாளம் வேண்டாம் என்று தனது தரவாட்டு பெயர் அடையாளத்தை பயன் படுத்துவதை விட்டுவிட்டதாக சொன்னார்,
அவரை நான் நிச்சயம் பாராட்டுகிறேன், ஆனால் பாவம் இந்த தரவாட்டு பெயர் என்பது அவரது வம்ச பெருமை அல்ல, அவர் மீது திணிக்கப்பட்ட அவமானம் என்பதே அவருக்கு தெரியவில்லை என்பதே, இந்த கட்டுரைகளை என்னை எழுதவைத்தது.
முதல் கட்டுரைக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நான் உண்மையில் குழம்பிவிட்டேன். நமது இன்றைய தலைமுறைக்கு இந்த எளிய வரலாறு கூடவா தெரியாமல் இருக்கிறார்கள் என்று.
அதனை தொடர்ந்தே மற்ற கட்டுரைகள் எழுத தொடங்கினேன், இது முதல் தொகுப்பு, இது மேலும் பல தொடர் தொகுப்புகளாக வரும்    


இந்து ராஜ்ஜியம் அமைக்கவேண்டும் என்று இன்றும் புலம்பும் பலருக்கு, அந்த கனவை நடத்திக் காட்டிய மராட்டிய மன்னன் சிவாஜியை சூத்திரன் என்று சொல்லி அரசனாக பட்டம் சூட்ட மறுத்த பார்பனர் வரலாறு தெரியாது, புத்த மதத்தில் இருந்து பலவற்றை திருடி அத்வைதம் என்று புது பெயர் சூட்டிக் கொண்ட ஆதிசங்கரன் வரலாறு தெரியாது, இது போன்று நாம் பள்ளியில் படிக்கும் வரலாற்று புத்தகத்தில் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நூலின் நோக்கம்  

விமர்சனம் எழுதுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று
கேப்ட்சா

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 1

  • Rs.250.00


தொடர்புடைய நூல்கள்

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?

உ.வே.சா தமிழ் தாத்தாவா?இந்த நூல் உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டை பற்றி ஏதோ அவர் இல்லையென்றா..

Rs.60.00

கண்டத சொல்றேன்

கண்டத சொல்றேன்

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்,  என்ற எனது முதல் நூலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எழுத..

Rs.100.00

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 2

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 2

நண்பர்கள் பலகாலமாக கேட்டுக் கொண்டிருந்த தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 2, 20..

Rs.250.00

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் 3 & 4

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் 3 & 4

பகுதி 3 - பைபிள் & பகுதி 4 - சோழர்கள்..

Rs.500.00

Tags: தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி - 1